பெண்மைக்குரிய உணர்வுகள். பெண்மைக்குரிய நளினம். ஆசை, காதல், விருப்பம், தேர்வு அத்தனையும் ஒரு பெண்ணுக்குரியவை. ஆனால், சுமந்துகொண்டிருப்பதோ ஓர் ஆணின் உடல். அடையாளம் இழந்து, ஆதரவு இழந்து, ஒரு கேள்விக்குறியாக அலைந்து திரிந்த வித்யா, வாழும் புன்னகையாக மலர்ந்த கதை இது.